சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்ட – பிரதமர் மோடி
சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. பிரதமர் மோடி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டினார். இந்தநிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று மதியம் திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம். இதற்காக கடந்த […]
ஒன்றாரியோவில் ஹோட்டல் உரிமையாளர் அடித்துக் கொலை
ஒன்றாரியோவில் ஹோட்டல் பில்லை செலுத்துமாறு கோரிய உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ஓவன் சவுன்ட் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 44 வயதான சாரிபுர் ரஹ்மான் என்ற நபரை, சில வாடிக்கையாளர்கள் தாக்கிக் கொன்றுள்ளனர். உட்கொண்ட உணவிற்கான பில்லை செலுத்துமாறு மூன்று பேரிடம் ரஹ்மான் கோரியுள்ளார். எனினும், இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது. கடந்த 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபிக் மாகாணத்தில் இரண்டு பிள்ளைகளை கொன்ற தந்தை
கியூபிக் மாகாணத்தில் ஜோலியேட் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண போலீசார் தெரிவிக்கின்றனர். இரண்டு பிள்ளைகளையும் கொன்ற குறித்த நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மர்மமான முறையில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்கா – ஒகையோவில் உள்ள வீட்டில் 3 குழந்தைகள் உட்பட 5 குடும்ப உறுப்பினர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர். யூனியன்டவுன் பொலிஸார் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 46 வயதான ஜேசன், 42 வயதான மெலிசா மற்றும் இவர்களது குழந்தைகள் 15 வயதான ரெனி,12 வயதான ஆம்பர் மற்றும் 9 வயது இவான் 15 மைல் தொலைவில் உள்ள லேக் டவுன்ஷிப்பில் உள்ள அவர்களது […]
ஸ்ரீலங்கன் டொப் 100 விருது பெற்ற ” அண்ணாச்சி நியூஸின் கிழக்கின் பிரதம நிர்வாகி, சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர்!
கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும் அண்ணாச்சி நியூஸின் கிழக்கு மாகாண பிரதம செய்தி நிர்வாகியும் .சிரேஷ்ட ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வரும் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வரைவதிலும், சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதிலும் முன்னிலை வகிக்கும் ஒருவராவார். அரசியல், சமூக, சமய, பொருளாதாரப் […]
பிரான்ஸ் நாட்டில் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான அடையாளங்களுக்கு தடை
பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் தடை […]
ஜிம்பாப்வேயில் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபரானார் எம்மர்சன்
ஜிம்பாப்வேயில் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபரானார் எம்மர்சன் ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24-ந்தேதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் […]
வவுனியாவில் 1 லட்சத்து 62 ஆயிரத்திற்கு விற்பனையான “மாம்பழம்” ! இந்த சாதனையை முறியடிக்க யாராவது இருக்கீங்களா?
மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம், வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான சனிக்கிழமை (26) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர், 1 […]
வசூலில் ₹600 கோடியை அள்ளிய ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாக ₹600 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்றைய தினம் 600 கோடி எல்லையை நெருங்கி இருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை தெரிவிக்கும் மூத்த சினிமா விமர்சகரான மனோபாலா விஜய் கூறுகிறார். ஜெயிலர் திரைப்படம் தமிழ் நாட்டில் ₹ 200 கோடி ஆந்திரர/ தெலுங்கான ₹75 கோடி கேரளா ₹ 50 கோடி […]
வரலாற்றில் முதல் தடவையாக இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “KIDS ENGLISH CAMP-2023”
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக “English language Development Academy” (ELDA) நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் வருடாந்த சிறுவர் ஆங்கில பயிற்சி முகாமும், பரிசளிப்பு நிகழ்வும் பொத்துவில் நாவலாறுப் பிரதேசத்தில் நடைபெற்றது. இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் வழிகாட்டலிலும் ELDA நிறுவனத்தின்பணிப்பாளர் டீ.கே.எம். மௌசீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆங்கில விருத்திக்குப் பொறுப்பாக இருந்து செயல்படும் […]