20 தினங்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ….

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொட்டும் மழையிலும் நேற்றையதினம் (04.10.2023) கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த (15.09.2023)ஆம் திகதி முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 20 தினங்களாக தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது வீதிகளில் […]

2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம்

2024 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம் 8 டிரில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இதனை அடுத்து வரும் அரசாங்கத்தின் பாதீட்டில் இந்த செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் வருமானங்களை எவ்வாறு ஈட்டுவது என்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. முன்னதாக அரச பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன எனினும் தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு 20ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் […]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சி தொல்லை

அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் , ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது . மோப்ப நாய்கள் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் புகார்கள் வந்தன. எனினும் இதுவரை ஒரு மூட்டைப்பூச்சியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறிய அமைச்சு மோப்ப நாய்களைக் கொண்டு பூச்சிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும் என தெரிவித்துள்ளது. அதோடு மூட்டைப்பூச்சிகள் உள்ளனவா என்று இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை […]

ஒட்டாவாவில் காலநிலையில் பாரிய மாற்றம்

ஒட்டாவாவில் எதிர்வரும் வாரங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் எனவும் குளிருடனான காலநிலை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. 132 ஆண்டுகளின் பின் வெப்பநிலை தொடர்பில் சாதனை பதிவாகியுள்ளது. விமான நிலையத்தில் நேற்றைய தினம் 30.6 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது. இது 1891 ஆம் ஆண்டு பதிவான 29.4 பாகை செல்சியஸ் என்ற பெறுதியை விடவும் அதிகமாகும் அதாவது 132 ஆண்டுகளின் பின்னர் வெப்ப நிலையில் சாதனையை நிலை நாட்டப்பட்டுள்ளது.

புடின் தனக்குதானே கொடுத்துக்கொள்ளும் பிறந்தநாள் பரிசு – அணு ஏவுகணை

ரஷ்ய மக்களுக்கு மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சைரன்கள் ஒலிப்பது வழமையாக இருந்து வருகிறது. எனினும், இன்று வழமைக்கு மாறாக காலை 10.30 மணியளவில் திடீரென நாடளாவிய ரீதியில் ஒலித்தன. சைரன் ஒலி எழுப்பிய நிலையில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் மக்களை 3ஆம் உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கும் அறிவிப்பு […]

சர்வதேச ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருட்களுக்கு தடை விதித்த சாய்ந்தமருது பாடசாலை !

நூருல் ஹுதா உமர் வருடா வருடம் ஒக்டோபர் 6 ஆந் திகதி எமது நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனால் வகுப்பறைகளில் வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் முகங்கொடுக்கின்ற அதேவேளை இன்றைய பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் பெற்றோர்களாகிய நீங்களும் பல சங்கடங்களுக்கு உட்படுகின்றீர்கள். எனவே, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கோ அல்லது அதிபருக்கோ […]

பிரான்ஸ் கரப்பந்தாட்ட போட்டி!

2023 அக்டோபர் 1ம் திகதி பிரான்ஸ் Allblacks விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 8 அணிகள் கழந்து கொண்ட கரப்பந்தாட்டப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் Allblacks Super Sunday மற்றும் Worries அணிகள் விளையாடி Allblacks super Sunday அணியினர் வெற்றிக் கோப்பயை தனதாக்கிக்கொண்டனர். ஆட்ட நாயகனாக Yaseer (கரப்பந்தாட்ட வீரர் ) மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக Nashif (கரப்பந்தாட்ட வீரர் ) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். தகவல் Allblacks விளையாட்டுக்கழக ஊடகப் பிரிவு. பிரான்ஸ்