கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்

இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் […]

பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்பில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கபடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிளாஸ்டிக் பயன்பாட்டு கட்டுப்பாடு தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் இது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் உற்பத்தியை செய்வோர் தெரிவித்துள்ளனர். சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை அகற்றுவதனால் பொருட்களின் […]

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்தில் நடந்த சோகம்

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பும் போதே குறித்த பேருந்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, […]

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அதோடு, அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன . ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளதுடன், உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை […]

காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள்

காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமல்லாது எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் […]

மன்னாரில் சரியான தலைமைத்துவம் இல்லாமையால் தொடர்ந்து பின் தள்ளப்படுகின்றது. அருட்பணி எஸ்.மாக்கஸ்

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையாலேயே இன்று மன்னார் தொடர்ந்து பின் தங்கி காணப்படுவதுடன் பல திட்டங்கள் தோல்வியிலும் அழிந்தும் செல்லுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். -உண்மை மற்றும் நல்லிணக்க சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளுடனும் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி […]

இந்திய வம்சாவளி தமிழர்களின் அடையாளத்தை முடக்காதே! கொதித்தெளும் வடிவேல் சுரேஷ் MP

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அண்மையில் பதிவாளர் நாயகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட பதிவாளர்க்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்க்கும் அனுப்பப்பட்டுருகின்ற சுற்றுநிறுபத்தில 11,1 /2023 என்ற இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபத்தின் மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை […]