காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதன்பின்னர் மருத்துவமனையை […]

ஒட்டாவாவில் பிரகடனமொன்றில் கைச்சாத்திட்ட 33 மதத் தலைவர்கள்

ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வறான குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டன பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அனைத்து வகையிலான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் […]

கனடாவில் யாழ்ப்பாண தமிழர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் முதல் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்று […]

காசா பகுதியில் தாக்குதல்கள் தீவிரம்

வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் மூன்று மில்லியன் […]

பிரித்தானியாவில் புயலில் சிக்கிய விமானம்

பிரித்தானியாவை ஏற்பட்ட புயலில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவை ‘Babet’ என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் தீவுகளில் […]

பசுபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் விசித்திர உயிரினம்

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், […]