ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட கனடா பிரதமர்

கனடாவின் வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர். உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வறுமையில் பாதிக்கப்பட்ட ரொறன்ரோ மக்கள்

ரொறன்ரோ நகரில் மக்கள் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவைச் சேர்ந்த பத்து வீதமான மக்கள் உணவு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ரொறன்ரோவில் உணவு வங்கிகளில் தங்கியிருப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது. அண்மையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசா பிராந்திய மோதல்கள் தொடர்பில் – கனேடிய பிரதமர்

காசா பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ ஆகியோர் டுவிட்டர் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். காசா பிராந்தியத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை அனுமதிக்க முடியாது என கனேடிய பிரதமர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பெண்கள், சிறுவர்கள், சிசுக்கள் போன்றோர் படுகொலை செய்யப்படுவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் படுகொலை செய்வதனை தவிர்க்குட’ வகையில் இஸ்ரேலிய அரசாங்கம் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக […]