எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு

எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எட்மோன்டனில் காணப்படும் பார்மஸிகளில் இவ்வாறு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தியாவசியமான மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் மருந்து வகைகளை நிரம்பல் செய்ய முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில வகை மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்க நேரிடுவதாக நோயாளிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

காசாவின் மனிதாபிமான நிலைமைகள் பெரும் கவலை – கனடிய பிரதி பிரதமர்

காசாவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கனடிய அரசாங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அண்மையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொது வெளியில் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், காசாவின் மனிதாபிமான நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாக கனடிய பிரதி பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார். காசா பிராந்தியத்திலிருந்து கிடைக்கப்பெறும் புகைப்படங்கள் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்துள்ளது என்பது பலராலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்hளர். இதேவேளை, இஸ்ரேலிய […]

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள்

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள் கனடாவிலிருந்து கணேமுல்ல பிரதேச முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான 6 கிலோ கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முகவரியின் உரிமையாளர் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.