இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா (Eleonora Dimitrova) இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
எலினோராவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டியதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இலங்கைக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாக எலினோரா தெரிவித்தார்.