அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் போடர் – கவாஸ்கர் கிண்ணத்துக்கான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நபள் ஆட்டம் இன்று தொடர்கின்றது.
நேற்று அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடியது.
இதன்போது இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியிருந்தது.
R.அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் R.ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியை முதல் இனிங்சில் 177 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தனர்.
இதன்போது ஜடேஜாவின் பந்து வீச்சு தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.
அதற்கு ஏற்றால் போல் ரவீந்ர ஜடேஜா பந்து வீசும் போது கையில் ஒருவகை திரவத்தை பயன்படுத்தியமை சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இதனால் ஜடேஜா பந்து பாணியை மாற்றியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் போட்டி மத்தியஸ்தரிடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு அமைய கள நடுவரின் அனுமதியின்றி வீரர் ஒருவர் ஏதேனும் திரவத்தை பயன்படுத்த முடியாது.