நூக்பூரில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அஸி பெற்ற அதிகூடிய 49 ஓட்டங்கள் உதவியால் 177 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்து வீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தமது முதல் இனிங்சுக்காக பதிலளித்த இந்தியா 400 ஓட்டங்களை பெற்று பெரும் மூச்சி விட்டது.
ஷர்மா 120 ஓட்டங்களையும் அஸ்கர் பட்டேல் 84 ஓட்டங்களையும் பெற்றனர்.
டொட் மேர்பி 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இனிங்சிலும் தடுமாறி 91 ஓட்டங்களுக்குள் சகல விக்கெடடுகளையும் இழந்தது.
இதன்படி இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
வேல்ட் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு (WTC) அமைய இந்த போட்டி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.