நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியில் இன்று (16) மாலை 03.00 மணியளவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ருப்பதன் காரணமாக ஆணா அல்லது பெண்ணா என பொலிஸாமீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சடலம் உருக்குலைந்த நிலையில் இர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.