கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் சுமார் 8170 மில்லியன் இலங்கை ரூபா பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.ஜயசிங்க என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் ஜயசிங்க 35 மில்லியன் கனடிய டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார்.

கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜாக்பொட்டி பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் றொரான்டோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.

மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் கார் கொள்வனவு செய்யவும், பல்வேற இடங்களுக்கு பயணம் செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் தாம் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *