டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலைகளை மையமாக கொண்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு இணையாக வட மேல் மாகாணத்திலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளது.
57 சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையில் 35419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 7978 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 7411 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.