மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரத் துறை ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட விர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரது கையொப்பத்துடன், நேற்று(17) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் இரண்டாம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.