” ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்.
இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம்.
தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன. இந்த அரசியலில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார்.
அதன்மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும், கதிரைகளும் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா போன்ற பகுதிகளில் இடம்பெற்றது.
இதில் கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.