தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை எளிமையான முறையில் – உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.
அந்தவகையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றது.
அட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், உறுப்பினர் தயாளன் குமாரசுவாமி, அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் சடையன் பாலச்சந்திரன், தவிசாளர் எம்.ராமேஷ்வரனின் பிரத்யேக செயலாளர் ராஜன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)