இலங்கை திருநாட்டின 75ஆவது சுதந்திர தினம் பெரும் பெருமிதத்துடன் இன்று கொண்டாடப்படுகின்றது.
சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சுதந்திரதினத்தை முன்னிட்டு காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அதேபோல் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.