சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அதே ஆரம்ப பாடசாலையில் கற்கும் 13 வயது மாணவனே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் உட்பட பாடசாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர்.
சந்தேகத்திற்கிடமான பாடசாலை மாணவர், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் படுகொலைத் திட்டம் ஒன்றை தயாரித்திருந்தமை தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய மாணவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொலைப் பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டில் மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.