பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பில் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் செயலாளர் நாயகமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் உத்திகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.