வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது.

ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு ரஷியாவுக்கு எதிராக திரும்பியது.

வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது.

50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது.

ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களிடையே உரையற்றினார்.

அப்போது வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டார்.

மேலும், வாக்னர் படை தலைவர் துரோகம் செய்துவிட்டார். முதுகில் குத்திவிட்டதாக தெரிவித்தார்.

ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுது.

பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்க முடிவு செய்தது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார்.

அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ரஷியாவில் ஏற்பட இருந்த ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *