டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம்.மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன.
அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்று அழைக்கின்றனர்.
ஆனால் டைட்டானிக் சிதைவுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வதில் இருள் மட்டுமே சவாலாக இருக்கிறது என்று கூற முடியாது. காரிருளையும் விட பயங்கரமான ஆபத்துகள் அங்கு இன்னும் என்னென்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?