டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்தது தொடர்பாக சிறப்பு விசாரணையை தொடங்க அமெரிக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பில் கடல்சார் புலனாய்வு சபையின் அனுசரணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக, நீர்மூழ்கி கப்பல் விபத்து இடம்பெற்ற இடமும் வரைபடமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவைப் பெறப் போகின்றன.
இந்த விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான விபத்து இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.