சுவிஸ் நாட்டில், இராட்சத பலூன் ஒன்றில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவிஸின் Bernஇல்,நேற்றைய தினம் காலை 7.00 மணியளவில் இராட்சத பலூனில் பறந்துகொண்டிருந்த ஒருவர் நெடுஞ்சாலையில் விழுந்துள்ளார்.

எனினும், அவர் அந்த பலூனிலிருந்து வேண்டுமென்றே குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அப்போது அந்த பலூனில் 6 பேர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்கள்.

பலூனை இயக்கியவர் உடனடியாக அதை அருகிலுள்ள Hinterkappelen என்னும் கிராமத்தில் தரையிறக்கியுள்ளார்.

இதேவேளை, குதித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *