கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ட்ரூடோ, மனைவியான ஸோப்பி கிரகரி ட்ரூடோவை பிரிவதாக தெரிவித்துள்ளார்.
18 ஆண்டு திருமண வாழ்க்கை முற்றுப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ஏன் திடீரென பிரியத் தீர்மானித்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், இந்த தம்பதியினர் திருமண வாழ்வு நிறைவுக்கு வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் பிரிந்து வாழ்வதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
எப்பொழுதும் நெருக்கமான குடும்பமாக தொடர்வோம் எனவும், ஆழமான அன்பும் பரஸ்பர மரியாதையும் தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் ட்ரூமெடா தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.