ஆசிரியர் விடுதலை முன்னணியால் தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி மண்டபத்தில், சங்கத்தின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தலைமையில் நடைப்பெற்றது.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் அதேபோல க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் லசந்த அபேரட்ண, விசேட அதிதியாக உதவி கல்விப் பணிப்பாளர் கணேஸ்ராஜ் மற்றும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன், அதன் தலைவர் சிவாநந்தன், பொருளாளர் வி.கங்காதரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் லசந்த அபேரட்ண, உதவி கல்விப் பணிப்பாளர் கணேஸ்ராஜ் ஆகியோர் ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தலவாக்கலை நிருபர் – பி.கேதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *