கராஜ் கதவு திறந்திருந்த வீட்டிலிருந்த சைக்கிளொன்றை திருட சென்ற திருடனொருவன் அந்த வீட்டிலிருந்த நாயுடன் கொஞ்சி குலாவும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாக இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் சென் டியகோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருடன் சைக்கிளை எடுத்து வெளியேற முற்படும் வேளையில் வீட்டினுள்ளே இருந்த கோல்டன் ரிட்டிர்வர் ரக நாய் திருடனை நோக்கி ஓடி வந்துள்ளது.
திருடன் உடனடியாக கொஞ்சம் கூட அஞ்சாது நாயை அன்பாக கொஞ்சி விளையாடி சைக்கிளை எடுத்து சென்று விட்டான்.
இதோ CCTV காட்சி திருடனை கண்டால் சென் டியாகோ பொலிஸிற்கு சொல்லுங்க