புலம்பெயர்ந்து சுவீஸ் நாட்டில் வாழும் வங்காலை புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவானது கடந்த அன்மைக் காலமாக மன்னாரில் பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளை வங்காலை புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவின் பங்குபற்றுதலுடன் மேற்கொண்டு வருகின்றது.
இதில் ஒரு கட்டமாக கடந்த செவ்வாய் கிழமை (08) மடு கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கியுள்ள கிராமமான மன்.சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பாடசாலையின் அதிபர் திரு.லதிஸ்லாஸ் அமலானந்தகுமார் அவர்களினதும் மற்றும் அவரின் தலைமை கொண்ட பாடசாலை ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலேயே பயண்பெற்ற பெற்றோர் முன்னிலையில் வங்காலை புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவினர் காலணிகளை வழங்கி வைத்தனர்.
இம்மாணவர்களின் காலணிகளுக்கு 138850 ரூபா தேவைப்பட்டபோதும் சுவீஸ் நாட்டில் வாழும் திரு பவுல் , திரு.மயூரன் தலா 36 ஆயிரம் ரூபாவும் வங்காலை சுவீஸ் குழு 66850 ரூபாவும் பங்களிப்பு செய்திருப்பதாகவும் இதன்மூலம் 44 மாணவர்கள் பயண்பெற்றுள்ளதாக இதன் இணைப்பாளர் திரு.சுனேஸ் சோசை தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)