மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான  5  ஆவது  T20  போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிம இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169; ஓட்டங்களை பெற்றது.

இதில் சூரியகுமார் யாதவ் வன் மேன் ஷோ காட்டினார். அவர் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4. பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள்

 

பந்து வீச்சில் ரொமரி சப்ர்ட்  31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானர்.

வெற்றி இலக்கான 170 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுடன் 8 விகுகெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றது.

இதில்  ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரனடன்  கிங.  அதிரடியாக ஆடினார். அவர் 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவண்டரிகளுடன் 85  ஓட்டங்கள்

 

அவருடன் இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த  நிகலஸ்  பூரான் 47 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் உறுதிப்படுத்தினார்.

அதேபோன்று இறுதியில் கிங்குடன்  மூன்றாவது விக்கெட்டில் இணைந்த ஹோப் அணியின் வெற்றியை நிலை நிறுத்தினார்.

அவர் 13 பந்துகளுகளுக்கு 22 ஓட்டங்களை  எடுத்தார்.

5  போட்டிகளை கொண்ட தொடரில் 3 -2 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் தொடரை வென்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *