கடந்த மாதம் முதல் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டுவிட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே சிறிய உரசல் இருந்து வருகிறது.
ஏனெனில், கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி மார்க் ஜூக்கர்பெர்க் ‘திரெட்ஸ்’ என்ற செயலியை டுவிட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்தார்.
தற்போது இருவரும் வெவ்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில், “எலான் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர் இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள முடியும் மற்றும் அதிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது. நான் அவருக்காக நேரம் ஒதுக்கினேன்.
டானா வைட் (அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப்பின் தலைவர்), இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் முறையான போட்டியாக மாற்ற முயற்சித்தார்.
ஆனால் எலான் தேதியை உறுதி செய்யவில்லை, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என்று கூறுகிறார். பின்னர் என்னை கொல்லைப்புறத்தில் பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார்.
சரியான தேதிப் பற்றி எலான் எப்போதாவது தீவிரமாக எடுத்துக் கொண்டால், என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.