இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உரிமை கட்சியாக மட்டுமல்ல தமிழர் தேசிய கட்சியாக கருதப்பட்ட ” தமிழர் விடுதலை கூட்டணியின்” பொறுப்பை தலைமைத்துவ பண்பை கொண்ட பெண் ஒருவருக்கு வழங்க மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமுமான v.ஆனந்த சங்கரி தீர்மானித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைமை ,கட்சிக்குள்ளே மீண்டும் வெடித்திருக்கும் சாதிய முரணபாடு , பிரதேசவாதம் , ஜனநாயக இன்மை …. இதர பல விடயங்களை சிந்தித்த ஆனந்த சங்கரி அவர்கள்
வடக்கு கிழக்கு மட்டுமல்ல மலையகம் , கொழும்பு , தெற்கு உட்பட அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கியவாறு தமிழ் முஸ்லிம் மக்கள் அன்புடன் மீண்டும் ஓரணியில் இணைய வேண்டும் இதற்காக அர்ப்பணிப்புக்களை செய்ய அனைவரும் இன மத பேதங்களை மறந்து முன் வரவேண்டும் இதுவே தமது விருப்பம் என ஆனந்த சங்கரி அவர்கள் கூறி இருக்கிறார்.
தனது குடும்பத்தார் அன்மையில் செயற்பாட்டு அரசியலில் நுழைந்தை வரவேற்கும் சங்கரி அவர்கள் குடும்ப அரசியல் உருவாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மேலும் மலையகத்தின் கல்விமானும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரொருவரும் தங்களோடு இணைந்திருப்பதானால் அவருக்கு முக்கிய பதவியொன்றை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தமக்கு பின்னால் ஒரு பெண்ணே வழி நடத்துவார் என்றும் விரைவில் தாம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் அந்த துணிகர பெண்ணுக்கு செயலாளர் பதவி வழங்க இருப்பதாக சங்கரி அவர்கள் கூறி இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறின.
– யாழ் கபிலன்-