வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். குறைவான சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்குச் செலுத்தவோ உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா செவ்வாய் கிழமை (15) இடம்பெற்றது.
இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றபோது அவர் தனது மறையுரையில்
மன்னார் மறைமாவட்டத்திலிருந்தும் இந்த மறைமாவட்டத்துக்கு வெளியே இருந்தும் வந்திருக்கும் யாத்திரிகர்களே கிறிஸ்தவர்கள் அல்லாத சகோதர சகோதரிகளே ஊடகங்கள் வழியாக இத்திருப்பலியில் பங்கு கொள்ளும் எனது அன்பு சகோதரமே
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கின்றார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ந் திகதி திருத்தந்தை உங்கள் நாட்டில் திருப்பலியை மேற்கொண்ட பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.
அன்றைய நாளில் அவருக்கு வழங்கப்பட்ட மடுமாதா சுரூபத்தையிட்டு நேசித்து போற்றுகின்றார்.
உலகம் போற்றும் இத்தலத்தை அன்று அவர் ஆற்றிய உரையிலும் இப்பொழுது எனது சிந்தனையிலும் செல்லுகின்றன.
அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ்காணும் விடயங்களையும் தருகின்றேன்.
மரியன்னை எப்பொழுதும் ஒவ்வொரு வீட்டினதும் அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்ளினதும் அன்னை. ஒரு அமைதியை நோக்கி திரும்புவதற்கு நாடுகின்ற அனைவருக்கும் அன்னை. பிரகாசிக்கின்ற இந்த இலங்கை நாட்டின் பிள்ளைகளை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.
எவ்வாறு மரியா சிலுவையில் தொங்கிய தனது மகனை விட்டு விலகாது நின்றாரோ அவ்வாறு துன்புறும் தனது இலங்கை நாட்டின் பிள்ளைகளை விட்டு விலகுவதில்லை.
ஆம் நமது பரிசுத்த தாயான மரியாள் எமது இலங்கை நாட்டின் மக்களை மறப்பதில்லை. நாம் செபமாலை ஓதி மரியன்னையின் பரிந்துரையை கேட்பதில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
மரியன்னையின் பரிந்துரை வழியாக நீதி அமைதி நல்லிணக்கம் எப்பொழுதும் நமக்கு கிடைப்பதாக
உடல் உணர்வு ரீதியாக வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்துவிட முடியாது.
பல தடவைகள் இந்த போரைப்பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்துக்கு மேற்கொண்ட மேய்ப்புப் பணி விஜயத்தின் போது மக்கள் மீதும் கைவிடப்பட்ட வீடுகள் மீதும். உடமைகள் மீதும் போரின் தாக்கங்கள் எவ்வாறு இருந்தது என்பதை ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
மீண்டும் எமக்கு போர் வேண்டாம். இனம் மதம் சாதி போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும் அமைதியும் சகிப்புத் தன்மையும் நிலை கொள்வதாக.
வெறுப்பும் , குரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலையாக இருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம்.
அத்துடன் ஒரு வாரத்துக்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் செயல் முறைகள் அமையும் என நாம் நம்புகின்றோம்.
இதற்காக செபிக்கின்றோம். எமது மடு மரியன்னையிடம் இதனை கொண்டுச் செல்லுகின்றோம்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்துள்ளேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள்.
குறைவான சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்குச் செலுத்தவோ உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.
பல்வேறு சமயங்கள் சார்ந்த சமயத் தலைவர்கள் அன்பையும் சகோதரத்துவத்தையும் நோக்கி மக்களை இட்டுச் செல்வதில் முன்னனி பங்கு செலுத்த வேண்டும்.
சமயத் தலைவர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரங்கள் சலுகைகளை வைத்துக் கொண்டு மற்றைய சமயங்களை இழிவுப்படுத்த முடியாது.
மாறாக மற்றவர்களுக்கு முன்னுராதமாக இருந்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும். நாம் ஒண்றிணைப்பின் முகவர்களாக இருக்க வேண்டும். இதைவிடுத்து பிரிவினையின் முகவர்களாக இருக்கக் கூடாது.
மரியன்னையின் விண்ணேற்பு விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இயேசு தனக்குள் இருந்த சக்தியை பயன்படுத்தி விண்ணேற்பு அடைந்தது போன்றது அல்ல. மரியன்னை இன்னொருவரின் சக்தியால் எடுத்துக் கொள்ளப்பட்டவள்.
மரியன்னை தெய்வீகத் தன்மை கொண்டவள் அல்ல. எல்லா மனிதர்களைப் போல அவளும் முழுமையான மனிதத் தன்மை கொண்டவள். ஆனால் மரியன்னைக்கு வழங்கப்பட்ட சலுகைகள் செயல்பாடுகள் தெய்வீகத் தன்மை கொண்டவளாக திகழ்ந்தாள்.
ஆகவே மரியன்னையைப் போல் நாமும் வாழ அளவிடம் வேண்டுவோம்.
கடவுளிடம் நாம் தேவைகளை கேட்கும்போது காலம் தாழ்த்தலாம் கடவுளுடைய எண்ணங்கள் வழிகள் நமது எண்ணங்கள் வழிகள் போல அல்ல. ஆகவே நாம் இறைவனை நோக்கி வேண்டுவதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது.
திருப்பலி முடிவில் உங்களுக்கு திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தை மகிழ்வோடு வழங்கவுள்ளேன் என இவ்வாறு தெரிவித்தாh.
(வாஸ் கூஞ்ஞ)