(இப்னு ஷெரீப்)
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர் தின நிகழ்வு அண்மையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்(தேசியப் பாடசாலை) நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.பி.சரத் சந்ரபால தலைமியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம வளவாளராக மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.ஜயபாலன் கலந்து கொண்டு சர்வதேச இளைஞர் தினத்தின் முக்கியத்துவம், மற்றும் தொழிற்திறன்கள் பற்றி விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஆரையம்பதி சிவமணி வித்தியாலய அதிபரும் ஆலய பரிபாலன சபை தலைவருமான வே.தட்சணாமூர்த்தி, மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எம்.சோமசூரியம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜே.கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.நிஷாந்தி, புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி என்.குகதாஸ் உட்பட அரச அதிகாரிகள் பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இருநூறுக்கும்
அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.