(இப்னு ஷெரீப்)
எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலுள்ள சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலத்தை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்முனை மாநகர சபைப் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் மிகவும் பழைமை வய்ந்த  இப்பாலம் பல தசாப்தங்களாகியும் இதுவரை எந்தவிதமான புனரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்படுவதுடன் சாதாரண மற்றும் கனரக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதளவு பழுதடைந்துள்ளது.
 இப்பிரதேசத்தின் அதிகளவான பயன்பாட்டிற்குரிய வீதிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்வீதியின் பாலம் இரண்டு சிறிய வாகனங்கள்கூட விலகிச் செல்ல முடியாதளவு மிகவும் குறுகியதாகக் காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இப்பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் நிலையையும் அணைந்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை , வணக்கஸ்தலங்கள், இராணுவ முகாம்,  அரச அலுவலகம் உட்பட தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வோரின் தொகையும் இந்த பாலத்தின் வழியாகவே அதிகமாக இடம்பெறுகின்றன.
அபாயகரமான நிலையிலுள்ள இப்பாலத்தை புனரமைப்பு செய்வதாக பலமுறை ஆய்வுகள், மதிப்பீடுகள் செய்யப்பட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் படையெடுத்த போதிலும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே மிகவும் ஆபத்தான  நிலையிலுள்ள இந்த ஒடுக்கமான பாலத்தினை துரிதமாக புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் நடவடிக்கை  எடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *