இப்னு ஷெரீப்)
நாட்டில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக வடக்கு கிழக்கில் 42 ஆயிரத்து 519 குடும்பங்களைச் சேர்ந்த ஓர் இலட்சத்து 38 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 18 ஆயிரத்து 951 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 136 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 23 ஆயிரத்து 568 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 165 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 9 ஆயிரத்து 122 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 480 பேர் இந்த வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.