யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையினரால் கடந்த ஆவணி (7-8) திகதிகளில் நடாத்தப்பட்ட நான்காவது அனைத்துலக தமிழியல் மாநாடு வழங்கும் நிகழ்வில் நாடு முழுவதும் கலைப் பணி ஆற்றி வரும் பத்து அண்ணாவியர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்
இதில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வசிக்கும் செபஸ்தியான் மாசிலாமணி மற்றும் வங்காலையில் வசிக்கும் சீமான் பத்திநாதன் பர்னாந்து ஆகிய இருவரும் மதிப்பளிக்கப்பட்டார்கள்
மேலும் செபஸ்தியான் மாசிலாமணி(பிலேந்திரன் )
அவர்கள் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முருங்கன் கிராமத்தில் 1948 ஆண்டு பிறந்தவர் மன்னார் மாவட்ட கூத்துக் கலை வளர்ச்சியில் இவரது பங்களிப்பும் கவனத்திற்குரியது ஆகும் .’கார்மேல் அன்னை கலாமன்றம்’ என்ற கலை அமைப்பை உருவாக்கி இவர் அளித்த கலைச் சேவை போற்றுதலுக்கு உரியது இவரது அண்ணாவியத்தில் அமைந்த கூத்துகளாக தாவீதின் வெற்றிஇ பாஞ்சாலி சபதம்இ ஞானசௌந்தரிஇ கடவுள் தீர்ப்பிடுகிறார்இ சிங்கபுரி ஆட்சிஇ புனித பவுல்இ புனித ஜோசப் வாஸ்இ உயிர் கொடுத்த பாரி வள்ளல்இ மனுநீதிச் சோழன்இ நான்காவது ஞானிஇ ஆகியவை அமைந்தன.பத்திற்கும் மேற்பட்ட வில்லிசைகளையும் தயாரித்து வழங்கி உள்ளார்.
சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்கள்
மன்னார் நாடார் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கூத்துக் கலைஞராகவும்இ அண்ணாவியராகவும் எழுத்தாளராகவும்இ கலை இலக்கியப் பணிகளை ஆற்றி வருகின்றார் இவரால் படைக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்ட கூத்துகளாக சவுலும் பவுலும்இ செஞ்சோற்று கடன்இ தரித்திர குழந்தை உதித்தது விண்மீன்இ கீழ்த்திசை ஞானிகள்இ துயரின் தாழ்ச்சிஇ ஆகியவற்றை குறிப்பிடலாம்இ 1998ல் இவரால் எழுதப்பட்ட கள்வனின் நடுவே கடவுள்இ திருப்பாடுகளின் காட்சிஇ மாபெரும் அரங்காற்றுகையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு கலைத்துறையில் இருந்து சற்று விலகி இருந்தாலும் புனைகதைத் துறைக்கு பங்களிப்பை அண்மைக்காலமாக வழங்கி வருகிறார். இவரது ஐந்து நாவல்களையும் கவிதை தொகுதியையும் இணைத்து விடியல் பதிப்பகம் வெள்விரி என்ற பெருந்தொகுப்பை வெளியீடு செய்துள்ளது. கூத்து நாடகத் துறைக்கான பங்களிப்பிற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் விருதையும் இலக்கியத்திற்கான கலாபூஷணம் விருதையும் இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
(வாஸ் கூஞ்ஞ)