( நூரளை பி.எஸ். மணியம்)
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்லவுக்கு எதிராக பத்து இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (19) தலவாக்கலை லிந்துலை பிராந்திய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.