பிரித்தானியாவில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக இறப்பு, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

பொலிஸார் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் உயிரிழப்பு அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றியது தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்தது.

பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டிலிருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து தாதி லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நோய்வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் 7 குழந்தைகளை கொன்றதாகவும், 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *