மட்டக்களப்பு எல்லையில் தடுத்து வைக்கப்படுள்ள சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விடுவிக்குமாறு கோரியும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையில் கண்டித்தும் இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தன மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்றைய தினம் பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது அவர்கள், மேய்ச்சல் தரை தொடர்பாக பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்ததுடன், பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு மீண்டும் திரும்பி செல்லும் வேளை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை அபகரித்துள்ள சிலர் அவர்களை வழிமறித்துள்ளதுடன், பல்சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பண்ணையாளர்களை தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவத்தினை கண்டித்தும் தடுத்து வைக்கப்படுள்ள ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.