நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து “ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்” மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியகத்திற்குச் சென்றனர்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.