யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் வட மாகாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடினார்.
இன்று ( 23/08/2023 நடைப்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய பிரச்சனை உள்நாட்டு அரசியல் நடப்பு நிலவரங்கள் குறித்தும் இதில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்த கூட்டம் தொடர்பாக அதில் கலந்து கொண்ட சட்டத்தரணி ப.நாகேந்திரன் கருத்து தெரிவிக்கையில்
மலையகம் மற்றும் அவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து எனது கருத்தினை தூதுவர் கேட்டறிந்தார்
மலையகத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கு இந்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களும் பெறக்கூடிய அனைத்து உரிமைகளையும் பெறக்கூடிய வகையில் அவர்களுக்கு நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுக் கொடுக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் சம்பளம்வேலைவாய்ப்பு போன்ற தொழிற்சங்க பிரச்சினைகளை மட்டுமே பேசாமல் நாட்டிலுள்ள மற்ற பிரஜைகளுக்கு கிடைக்கக் கூடிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினேன்
அதே வேளையில் 1953 முதல்1983 வரையிலான பல்வேறு கால கட்டங்களில் மலையகப் பகுதிகளில் இருந்து வடக்கு கிழக்கில் குடியேறிய மக்களுக்கு வளப் பங்கீடு முறையாக மேற்கொள்ளாமல் அரச நிர்வாகம் பாகுபாடு காட்டி வருகிறது அது அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்றும் எடுத்துக் கூறினேன்
எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் தான் கிளிநொச்சி மாவட்டத்தில் சில கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மலையக மக்கள் குடியேற்றப்பட்டுள்ள கிராமங்களில் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் தன்மை நீர் பங்கீடு பொருளாதார நிலை குறித்தும் அறிய முடிந்தது என்றும் இவற்றுக்கு படிப்படியாக தீர்வினை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும் கூறினார்