யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.புதன்கிழமை (23-08-2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதற்கமைய இன்று (24.08.2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது…இந்த விபத்து ஏற்பட்டதற்கான கூரணம் குறித்து பொலிஸார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்