சிறந்த தமிழ்ப்படமாக, ‘கடைசி விவசாயி’ தேர்வு
திரைப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
69-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது, மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்துக்கு அறிவிக்கப்பட்டதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார்.
மேலும்
சிறந்த மலையாளம் திரைப்படம் – Home
சிறந்த கன்னடம் திரைப்படம் – 777 Charlie,
சிறந்த தெலுங்கு திரைப்படம் – Uppena தெரிவானது.
அத்துடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டது.
கருவறை’ படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.