தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்து சிலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அன்மையில் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கொழும்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்து இருந்தார .
அதன் முதற்கட்டமாக இன்று பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திர குமார் போன்னம்பலத்தின் கொழும்பு வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு தற்போது அங்கு கூடி இருக்கின்றனர்.
மேலும் பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர்
இதேவேள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர கனகரட்ணம் சுகாஸ் விடுத்துள்ள அறிக்கையில்
#கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டைச் சுற்றிவளைத்துப் பேரினவாதிகள் அச்சுறுத்தல்!
பதட்ட நிலை தொடர்கின்றது…
எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் #அடிபணியமாட்டோம்!
தலைகொடுத்தேனும் #தமிழ்த் #தேசியம் காப்போம்! என குறிப்பிட்டு இருக்கிறார்.