இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில் பல்வேறு மாகணங்களில் பிரிந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒன்று கூடல் நாளை ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெறுகிறது.
இந்த நிகழ்வில் ஒன்று கூடலுடன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் சார் தேவைகள் குறித்தும் விசேடமாக மாணவர்களின் கல்விக்கு எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொள்வது என்பது குறித்து எம் மக்களோடு கலந்துரையாட இருப்பதாக பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார்.
நாளைய நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைப்பெறுவதாகவும் இந்திய பூர்வீக இலங்கை தமிழர்கள் அனைவரையும் அழைப்பதாக சொன்னார்.