கொழும்பு டாம் வீதியிலுள்ள பொது மலசல கூடத்தின் பெண்கள் பிரிவில் ஆண்களை அனுமதிக்கும் செயலை புறக்கோட்டையில் தேசிய பத்திரிகைகளை விநியோகிக்கும் அன்னை ப்ரிதா நேற்றைய தினம் கருத்து வெளியிட்டு இருந்தார்…!!!
சிரேஷ்ட ஊடகவியலாளரான அஷ்ரப் ஏ ஷமிட் அவர்கள் பாதிக்கப்பட்ட அன்னையை சந்தித்து பேட்டியொன்றை எடுத்தார்.
அதில் தாய் மலசல கூடத்தில் தாம் பட்ட அவமானத்தை வேதனையோடு சொன்னார். குறிப்பாக பொது மலசல கூடத்தை நிர்வாகிக்கும் பெண் அங்கு வரும் ஆண்களை பெண்கள் பகுதக்கு செல்ல அனுமதிப்பதால் அங்கு பெண்கள் வேதனையை அனுபவிக்கின்றனர்.
இந்த செய்தியை எமது “அண்ணாச்சி நியூஸ்” ஊடாக அறிந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ராஜூ பாஸ்கரன் உடனடியாக மாநகர ஆணையாளரின் கவனத்தில் கொண்டு வந்ததுள்ளார்.
மேலும் மாநகர சபை உறுப்பினர்களின் வட்சம் குழுவில் இதனை பகிர்ந்ததுடன் மாத்திரமல்லாது இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார்.