(அஸ்ஹர் இப்றாஹிம் )
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் காத்தான்குடியைச்சேர்ந்த தனியார் நிறுவனமொன்று தன்னார்வாக முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் வழிப்போக்கர்கள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், வாடிக்கையாளர்களுக்கு தாகசாந்தி வழங்கியமை அனைவரினதம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இத்தாகசாந்தி குளிர்பானத்தினை இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அருந்தி மகிழ்ந்தனர்.