(எஸ்.அஷ்ரப்கான்)

முதலாவது சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப்- 2023 போட்டியின் சர்வதேச சிரேஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிய கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் (400 m Hurdles,100 m Hurdles) தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார்.

கடந்த 19, 20ந் திகதிகளில் தியகம சர்வதேச மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குறித்த வெற்றிகளை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் பெற்றுள்ளார்.

இவகுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று (28) கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு பாராட்டு சான்றிதழினை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட குழுவினர் வழங்கிக் கெளரவித்தனர்.

இந்நிகழ்வில், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.
ஜபீர், உதவிக் கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி)
யு.எஸ்.எம்.சஜித், கல்முனை தமிழ் கோட்டக்கல்வி அதிகாரி யு.எல்.ரியால், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலீக் ஆகியோருடன் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *