அமெரிக்காவின் MaryLand செனட்டரான கிறீஸ் வேன் ஹோலன் உத்தியோகபூர்வ விஜனமொன்றை மௌற்கொண்டு இலங்கை விஜயம் செய்திருக்கிறார்.
ராஜதந்திரியான கிறீஸ் அவர்களின் தந்தை கிறீஸ் வேன் ஹோலன் சீனியர் 1972 – 1976 ஆம் ஆண்டு இலங்கையின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியவர்.
தற்போதைய நிலையில் இவரது வரவானது முக்கிய அரசியல் விடயமாக நோக்கப்படுகிறது.
சீன போர்க்கப்பல் இலங்கை வர இருக்கிற சமயத்தில இவர் இலங்கை வந்திருக்கிறார்.
இவருடன் தாம் பல இடங்களை சுற்றி பார்க்க இருப்பதுடன் இலங்கையின் பொருளாதார மீள் வளர்ச்சி குறித்து கூடிய அவதானம் செலுத்த இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஷாங் கூறுகிறார்.
இளைஞர்களை சந்தித்த செனட்டர்
இலங்கையிலுள்ள அமெரிக்கன் சென்டர் இளைஞர்களை செனட்டர் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.