பாரிசில் இருந்து – ஊடகவியலாளர் – இருளப்பன் ஜெகநாதன்
ஸ்ரீ கணேஷ் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 27 ஆம் திகதி வெகு விமரிஷியாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 27, 2023 அன்று பாரிஸ் லா சப்பல் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா ஊர்வலம் காலை 10:30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.
ஐரோப்பாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் ஒரு திருவிழாவாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. மயில் ஆட்டம் , சிலம்பு – தீச்சட்டி – தேங்காய் உடைத்தல் – நாதஸ்வர மேல இசை – என எமது தாய் நாட்டில் இடம்பெறுகின்ற தேர்திருவிழாவுக்கு இணையாக அனைத்து பாரம்பரிய அம்சங்களோடு கோலாகலமாக நடைபெற்றது.
காலை 7 மணிக்கு துவங்கிய திருவிழா மாலை 6 மணிவரை பாரிஸ் லாச்சப்பல் நகரெங்கும் வளம் வந்தது,
லாசபல் நகர் வேண்டும் தோரணம் கட்டப்பட்டு வர்ணமயமாய் காட்சியளிக்கப்பட்டு இது பரிசா அல்லது யாழ்பாணமா என்று வியந்து பார்க்கும் அளவில் எம்மக்கள் எமது கலாசார ஆடைகளோடு பூச்சூடி வருகை தந்து இருந்தமை – யாதும் ஊரே கவரும் கேளீர் என்பதை போல எங்கு சென்றாலும் எம் அடையாளம் மாறாது என்பதை பறை சாற்றியது.
ஊர்வலம் இசைக்கலைஞர்களால் (புல்லாங்குழல் மற்றும் நாகேஸ்வரம் மற்றும் மேளம்) இயற்றப்பட்டது. அவர்களுக்குப் பிறகு காவடி என்றழைக்கப்படும் மயில் இறகுகளால் ஆன பெரிய வளைவைத் தோளில் சுமந்த நடனக் கலைஞர்களும், மற்ற நடனக் கலைஞர்கள் கற்பூரம் எரியும் மண் பானைகளைத் தலையில் சுமந்தபடியும் பக்திப்பரவசத்தோடு வந்தார்கள்.
. 5 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலையை தாங்கிய அணிவகுப்பு, துணி, மாலைகள், புதிய மலர்கள், வாழைப்பழங்கள், தேங்காய்கள் மற்றும் வெற்றிலை மர இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இரண்டாவது அணிவகுப்பு முருகப்பெருமானை தேரில் பின் வந்தது,
துர்கா தேவி மூன்றாவது அணிவகுப்பு பவனியில் பின் தொடர்ந்தது 1996 ஆம் ஆண்டு முதல் பாரிஸின் 18வது வட்டாரத்தில் கொண்டாடப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவின் போது பிரசாதங்கள் மற்றும் தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் விநியோகிக்கப்பட்டன.
நன்றி பாரிசில் இருந்து – ஊடகவியலாளர் – இருளப்பன் ஜெகநாதன்