இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான “இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா தலைமையில் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் இன்று கல்முனையில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எப்.எம். பழீல் கல்முனை பிரதேச செயலக முன்றலில் வைத்து போதையொழிப்பு பேரணியை தொடக்கி வைத்தார். கல்முனை பிரதான வீதியூடாக சென்ற பேரணி பொதுச்சந்தையை ஊடறுத்து கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று அருவி கலை மன்ற கலைஞர்களினால் போதையொழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் கொடுமை போன்றன உள்ளடக்கிய கருவை கொண்ட வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் ஊடக செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை இணைப்பாளர் ஏ.எல்.எம். அஸீஸ், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரும், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் செயற்குழு உறுப்பினருமான பீ. ஜெனிட்டா, இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் செயலாளர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களில் உள்ள பெண் தலைவிகள், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர் ஆர். அனுஸ்கா, ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், ஆசிரியருமான எம்.எம். விஜிலி மூஸா, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர்கள், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.