போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகை வரலட்சுமிக்கு லனாய்வு ஏஜென்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயினும் தமக்கு அவ்வாறான சம்மன் எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளரான ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு, நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைந்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வரலட்சுமி சரத்குமார் மறுப்பு
தமக்கும் புலான்ய்வு துறையினரால் விசாரணைக்காக எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும் ஊடகங்கள் தவறான தகவலை பரப்புவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
#Fakenews pic.twitter.com/g13x9vFaQZ
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) August 29, 2023
எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்